கொட்டித்தீர்த்த கனமழை… வெள்ளத்தில் மிதக்கும் கோவை ரயில்நிலைய மேம்பாலம் ; நீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்!!!
Author: Babu Lakshmanan27 ஆகஸ்ட் 2022, 10:11 காலை
கோவை : நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் கோவை ரயில் நிலையம் பாலம் மற்றும் உப்பிலிபாளையம் மேம்பாலம் அடியில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கோவையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது குறிப்பாக காந்திபுரம் ரயில் நிலையம் கணபதி பீளமேடு லட்சுமி மில் ராமநாதபுரம் ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் அடியில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதேபோல, உப்பிலிபாளையம் மேம்பாலம் அடியிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை ஆணையாளர் சர்மிளா நேரில் ஆய்வு மேற்கொண்டு, சுரங்க பாதைகளில் தேங்கிய நீரை, இராட்சச மோட்டார்கள் மூலம் அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
0
0