கோவையை புரட்டிப்போட்ட கனமழை… நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ; மழை பாதிப்புகளை ஆய்வு செய்த எஸ்பி வேலுமணி..!!

Author: Babu Lakshmanan
23 November 2023, 10:55 am

கோவையில் பெய்த தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார்.

கோவையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் அவ்வப்போது மழைபெய்து வந்துகொண்டு இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக கோவையில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், கோவை நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவு மழை பெய்து வருவதால் தற்பொழுது நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக, கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்னம்மநல்லூர் பகுதியில் உள்ள நொய்யலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதை முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார். மேலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளையும் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் உடனிருந்தனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி