கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை… பாலத்தில் அருவி போல் கொட்டிய மழைநீர் ;ஆனந்த குளியலிட்ட முதியவர்!!

Author: Babu Lakshmanan
1 May 2023, 5:58 pm

கோவை ; பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலத்தில் இருந்து அருவி போல் கொட்டிய மழை நீரில் முதியவர் ஆனந்த குளியலிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலைகள் உயரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், மேம்பால பணிகள் முழுமை பெறாமல் உள்ளதால் மழைநீர் வடிகால் பணிகளும் முடிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து இரவு வரை பலத்த மழை பெய்தது. பாலத்தின் மீது இருந்த தேங்கிய தண்ணீர் கீழே விழந்தது.

அருவி மாதிரி அந்த மழை நீர் விழந்ததை பார்த்த அங்கிருந்த ஒருவர் உடனடியாக ஓடி அந்த அருவி நீரில் குளித்தார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்ட வருவது குறிப்பிடத்தக்கது.

  • Azhagi movie young Parthiban actor Satheesh அட இவரா.!அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்தவரின் தற்போதைய நிலைமையை பாருங்க.!