தனி காவலர் பாதுகாப்புக்காக இஸ்லாமியர் மீது பொய் புகார்… இந்து முன்னணி பிரமுகர் கோவையில் கைது!!

Author: Babu Lakshmanan
3 May 2024, 2:23 pm

கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுறுத்துவதாக கூறி நாடகமாடிய இந்து முன்னனி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சூர்ய பிரசாத் என்பவர் இந்து முன்னனி அமைப்பின் செல்வபுரம் நகரத் தலைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி அன்று செல்வபுரம் வடக்கு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த அசாருதீன் என்பவர் தன்னை செல்போனில் படம் எடுத்ததாக கூறி அவரை மிரட்டி செல்போனை பறித்து செல்வபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

மேலும் படிக்க: ஆவினில் ஒரு ரூபாய்க்கு மோர்… 300 யூனிட் இலவச மின்சாரம்… தமிழக அரசுக்கு டிமேண்ட் வைத்த வானதி சீனிவாசன்..!!!

இதையடுத்து போலீஸார் அசாருதீனிடம் விசாரணை நடத்தி செல்போனை ஆய்வு செய்த போது, செல்போனில் படம் ஏதும் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. மேலும், விசாரணையில் தனி பாதுகாவலர் வேண்டும் என்பதற்காக அசாருதீனை மிரட்டி செல்போனை பறித்து நாடகமாடி பொய் புகார் அளித்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து தன் மீது பொய்யான புகார் அளித்து இரு தரப்பினரிடையே பிரச்சினையை தூண்டும் விதமாக செயல்பட்டதாக, அசாருதீன் அளித்த புகாரின் அடிப்படையில், இந்து முன்னனி பிரமுகர் சூர்ய பிரசாத் மீது வழக்கு பதிவு செய்த செல்வபுரம் காவல்நிலைய போலீஸார் சூர்ய பிரசாத்தை கைது செய்தனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி