மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு விசாரணை வளையத்தில் சிக்கிய கோவை விடுதி உரிமையாளர் : தங்கும் விடுதிக்கு பூட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan21 November 2022, 4:17 pm
மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு விவகாரத்தில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதி மகிழ் வியன் அகம் என்ற தங்கும் விடுதிக்கு பூட்டு போடப்பட்டது.
கர்நாடகா மாநிலம், மங்களூரில் நேற்று முன்தினம் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஆட்டோ டிரைவரும், பயணியாக வந்த ஷாரிக் (வயது 22) என்பவரும் படுகாயமடைந்தனர்.
மங்களூர் சம்பவத்துக்கும், கோவை குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரிக்கப்படுகிறது. இது குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது.
மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய முகமது ஷாரித் மற்றும் சுரேந்தர் ஆகியோர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதி மகிழ் வியன் அகம் (MMV) என்ற தங்கும் விடுதியில் கடந்த செப்டம்பர் மாதம் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் அந்த விடுதிக்குச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் விடுதி உரிமையாளர் காமராஜ் என்பவரை விடுதியை பூட்டி விட்டு விசாரணைக்கு வருமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
இதனையடுத்து லாட்ஜ் உரிமையாளர், மேலாளர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.