ஏலச்சீட்டு நடத்தி ரூ.96 லட்சம் மோசடி.. கணவன் – மனைவி கைது செய்து சிறையில் அடைப்பு!!

Author: Babu Lakshmanan
8 April 2023, 9:25 am

கோவையில் ஏலச்சீட்டு நடத்தி 96 லட்சம் மோசடி செய்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ் குமார்(51), சுமதி(46) தம்பதியினர். இவர்கள் அப்பகுதியில் கடந்த 2017ம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ முருகன் சிறுசேமிப்பு என்ற பெயரில் ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இவர்களது ஏலச்சீட்டு நிறுவனத்தில் சூலூர் பகுதியில் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் 13,80,000 பணம் செலுத்தி உள்ளார்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர்கள் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர். இது குறித்து ஸ்ரீதேவி கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

விசாரணையில் அந்த நிறுவனத்தில் மேற்கொண்டு மைதிலி, ஜெய்சக்தி, கோவிந்தராஜ் ஆகியோரும் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது. மேலும், இதுபோன்ற 43 பேரிடம் ஏலச்சிட்டு பணம் 96 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு திருப்பி தராமல் மோசடி செய்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து ரமேஷ்குமார் மற்றும் அவரது மனைவி சுமதியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • Vidaamuyarchi Release date அஜித் வாக்கு என்னாச்சு..? மீண்டும் தள்ளிப்போகிறதா விடாமுயற்சி ரிலீஸ்?