காயத்துடன் சுற்றித்திரியும் குட்டியானை கவலைக்கிடம்… வனத்துறை மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Author: Babu Lakshmanan
23 March 2022, 7:34 pm

கோவை: வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் 10 வயது பெண் யானை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிக்கண்டி கிராமத்திற்கு அருகில் 10 வயது பெண் யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 20ம் தேதி உடல் நல குறைவான யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், இன்று காலை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் யானைக்கு வனத்துறை மருத்துவர் குழு என 50க்கு மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் யானை உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், யானையின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டால் வனப்பகுதியில் இருந்து முகாமிற்கு அழைத்து செல்லவும் திட்டமிருப்பதாகவும் வனத்துறை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!