கோவையில் 5 இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறைவு… கட்டு கட்டாக சிக்கிய பணம்… கிரீன் பீல்ட் கட்டுமான நிறுவனத்தில் நீடிக்கும் சோதனை..!!

Author: Babu Lakshmanan
5 January 2024, 2:26 pm

கோவையில் 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில், 5 இடங்களில் நேற்றிரவு சோதனை நிறைவடைந்தது.

வரி ஏய்ப்பு தொடர்பாக கோவையில் ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனம் மற்றும் தொழில் அதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த இரண்டாம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டனர். மொத்தம் 6 இடங்களில் சோதனையானது நடத்தப்பட்டது.

ஈரோட்டைச் சேர்ந்த சதாசிவம் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து நடத்தும் காளப்பட்டி பகுதியில் உள்ள கிரீன் பீல்ட் கட்டிட கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம், பட்டணம் பகுதியில் உள்ள ரியல் வேல்யூ லேண்ட் ப்ரொமோட்டர்ஸ் உரிமையாளரான ராமநாதன் தங்கியுள்ள ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் உள்ள இல்லம் மற்றும் அலுவலகம், அவரது மகன் சொர்ண கார்த்திக் தங்கியுள்ள சூலூர் ரூபி கார்டன் பகுதியில் உள்ள வீடு, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் வேலையாட்கள் தங்கி உள்ள நாயக்கன்பாளையம் ராமலிங்கம் நகர் பகுதியில் உள்ள வீடு, கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள எல்லன் பம்ப் நிறுவன மேலாண் இயக்குனர் விக்னேஷ் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 5 இடங்களில் சோதனை நிறைவு பெற்றது.குறிப்பாக கோவை பட்டணம் புதூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராமநாதன் அலுவலகம், வீடு மற்றும் அவரது மகன் சொர்ண கார்த்திக் இல்லம், பணியாளர்கள் தங்கும் அறை ஆகிய 4 இடங்களில் 3 நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.

இதில் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் தொழிலதிபர் ராமநாதன் வீட்டில் இருந்து கட்டுகட்டாக பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் கூறப்படுகின்றது. காளப்பட்டியில் உள்ள கிரீன் பீல்ட் கட்டிட கட்டுமான நிறுவனத்தில் மட்டும் சோதனை தொடர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!