9வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் தொடக்கம்… விதவிதமாக பறந்த இராட்சத பலூன்கள்… அனுமதி மறுப்பால் பொதுமக்கள் ஏமாற்றம்..!!

Author: Babu Lakshmanan
13 January 2024, 10:24 am

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 9வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா தொடங்கியது.

வெப்பக்காற்று பலூன்கள் வெளிநாடுகளில் மட்டுமே பறக்க விடப்பட்ட நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் பறக்க விடப்படுகிறது. இந்த ஆண்டு ஒன்பதாவது சர்வதேச பலூன் திருவிழாவுக்கு பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, வியட்னாம், என எட்டு நாடுகளில் இருந்து 11 பலூன்கள் வரவழைக்கப்பட்டு, பொள்ளாச்சி ஆச்சிபட்டி மைதானத்தில் இருந்து வானில் பறக்க விடப்பட்டது.

இந்த ராட்சத பலூனில் வெப்பக்காற்றை நிரப்பி, அதற்கென பிரத்யேக பைலெட்டுகளை கொண்டு வானில் பொள்ளாச்சியை சுற்றி வட்டமடித்து பறந்தது. இந்த வெப்ப காற்று பலூனில் பறக்க கடந்த எட்டு ஆண்டுகளும் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால், இந்த ஆண்டு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பது வருத்தமளிக்கும் விதமாக உள்ளதாக பலூன் திருவிழாவை கான வந்த பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், மாலை வேளையில் இந்த வெப்பக்காற்று பலூனில் 100அடி உயரம் வரை பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு நபருக்கு 1600 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பொங்கல் விடுமுறை நாட்களில் நடக்கும் பலூன் திருவிழாவை கான பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பலூன் திருவிழாவில் தமிழகம் மற்றும் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

  • Chinmayi’s viral social media post “உங்களுக்கு கன்னிப்பெண் கேட்குதா “…ஆண்களை கடுமையாக தாக்கிய பாடகி சின்மயி…!
  • Views: - 438

    0

    0