ஈஷா மஹாசிவராத்திரி விழா: இலவசமாக பங்கேற்பது எப்படி?… லட்சக்கணக்கான மக்களுக்கு அன்னதானம்

Author: Babu Lakshmanan
6 March 2024, 5:21 pm

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இலவசமாக பங்கேற்கலாம். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இரவு அன்னதானம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில், வரும் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் மஹாசிவராத்திரி விழாவில் நேரடியாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் மூலமும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்விழாவில் இலவசமாக பங்கேற்க விரும்புவோர் https://isha.sadhguru.org/mahashivratri/ta/attend-in-person/ அல்லது isha.co/tnmsr2024-VAT என்ற லிங்கை பயன்படுத்தி உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை கொடுத்து இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். நேரில் பதிவு செய்ய விரும்புவோர், மார்ச் 8 ஆம் தேதி அன்று கோவை ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பதிவு மையத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வருபருக்கு முன்னிரிமை என்ற அடிப்படையில் இந்த பதிவு நடைபெறும்.

ஈஷாவில் 30-ம் ஆண்டாக சத்குரு முன்னிலையில் கொண்டாடப்படும் இவ்விழாவில் மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. ஜெகதீப் தன்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!