இந்து கடவுளை கொச்சைப்படுத்துவதா..? திமுக எம்பி மீது நடவடிக்கை எடுங்க.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோவை காமாட்சிபுரி ஆதீனம் வலியுறுத்தல்..!!

Author: Babu Lakshmanan
13 July 2023, 1:58 pm

இந்துக் கடவுளை கொச்சைப்படுத்தியதாக திமுக எம்பி செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக தர்மபுரி எம்பி செந்தில் குமார் இந்து மதத்தை இழிவுபடுத்தி வருகிறார். அண்மையில் இந்து மதத்தின் முழு முதற்கடவுளாகிய பார்வதி – பரமேஸ்வரனை கொச்சையாக தொலைக்காட்சியில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்கள். லட்சோப லட்ச சிவனடியார்கள் மற்றும் இந்து மதத்தினரை பாதிக்கும்படியாக இந்த செயல் அமைந்துள்ளது.

இவருடைய செயலை நன்கு கண்காணித்து முதலமைச்சர் ஸ்டாலின் சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும். இதுபோன்று இனி யாரும் நடந்து கொள்ள கூடாது.

Courtesy : tamil Diary

எல்லா மதத்தில் பல்வேறு விதமான புராணக்கதைகள் உள்ளன. ஆனால், இந்து மதத்தை மட்டும் குறிவைத்து தாக்குவது வேதனைக்குள்ளாகியுள்ளது. இதுபோன்ற செயல்களை தக்க முறையில் தண்டிக்கா விட்டால், மீண்டும் மீண்டும் இந்து மதத்தை இழிவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ