கந்தசாமி பிலிம்ஸ் அலுவலகத்தில் ஐடி ரெய்டு… கோவையில் 2வது நாளாக தொடரும் சோதனை..!!

Author: Babu Lakshmanan
3 August 2022, 10:06 pm

கோவையில் கந்தசாமி பிலிம்ஸ் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை கோபாலபுரத்தில் இயங்கிவரும் கந்தசாமி பிலிம்ஸ் எனும் கந்தசாமி மன்னார் என்பவருக்கு சொந்தமான திரைப்பட விநியோகஸ்தர் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகின்றது.

சென்னையில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையின் தொடர்ச்சியாக கோவையிலும் இரண்டாவது நாளாக சோதனை இந்த சோதனை நடைபெற்று வருகின்றது.

6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வரும் இதில் பாதுகாப்பு பணியில் 5க்கும் மேற்பட்ட போலிசார் ஈடுப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் மதுரையை தொடர்ந்து கோவையிலும் சோதனை நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!