கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முதியவர் உள்பட இருவர் கைது : 4 கிலோ கஞ்சா மற்றும் 4 சக்கர வாகனம் பறிமுதல்!!

Author: Babu Lakshmanan
11 April 2023, 6:21 pm

கோவை : கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இரு முதியவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போதை ஒழிப்பிற்கான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர் சந்திப்பின்போது, தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்னம்பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலிசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்த போது, 2 பேர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஒருவர் சோமனூர் பகுதியை சொந்த ஸ்ரீபதி(45), மற்றொருவர் ராஜேந்திரபிரசாத் (64) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் 4 சக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!