சூலூர் பகுதியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு கொண்டு சென்றவரை கைது செய்து விசாரணை..!!

Author: Babu Lakshmanan
10 October 2022, 8:12 pm

கோவை : சூலூர் அருகே விற்பனைக்காக 5 கிலோ கஞ்சாவை எடுத்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருள்களுக்கு எதிராக காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்று (10.10.2022) காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான பொதியம்பாளையம் பிரிவு, தென்னம்பாளையத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சாவை விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த வாகாரம்பாளையத்தைச் சேர்ந்த ராமு என்பவரது மகன் சுரேந்திரன்(20) என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!