வாழ்க்கையை ஒளிரச் செய்யுமா இந்த கார்த்திகை தீபம்..? நம்பிக்கையுடன் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள்..!!
Author: Babu Lakshmanan10 November 2022, 5:58 pm
கோவை மண் பாண்ட தொழிலாளர்கள பலர் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மண் பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் பலர் மண் பாண்ட பொருட்கள் தயாரித்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந் தேதி கார்த்திகை தீபம் விழா கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி வித விதமாக டிசைன்களில் சிறியது முதல் பெரிய அளவிலான மண் அகல் விளக்குகளை தயார் செய்து வருகிறார்கள்.
தீப அகல்விளக்குகள் கோவை பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு கொரோ னா அச்சுறுத்தல் காரணமாக கார்த்திகை தீப அகல் விளக்கு விற்பனை மந்தமாகவே காணப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை தீப அகல் விளக்குகள் அதிக அளவில் விற்பனை நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக மண்பாண்ட தொழிலா ளர்கள் தெரிவித்தனர். இதையொட்டி இந்த பகுதி விளக்கு தயாரிக்கும் தொழிலாளர்கள் அதிக அளவில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.