கோவை உக்கடத்தில் மேம்பால பணிக்காக புதைவிட மின்சார கேபிள் அமைக்கும் பணி நிறைவடைந்தது
கோவை உக்கடம் ஆத்துப்பாலம் சாலையில் ரூபாய் 450 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதில் உக்கடம் பஸ் நிலையம் அருகே உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கின்றன. இந்த கம்பிகள் மேம்பாலத்தின் குறுக்காக செல்வதால் மேம்பாலம் கட்டும் பணி தொடர முடியாத நிலையில் உள்ளது.
இதையடுத்து, உக்கடம் பெரியகுளம் கரையிலிருந்து துணை மின்நிலையம் வரை உயர் அழுத்த கம்பிகளை புதைவட கேபிள் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூபாய் ஒன்பது கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது, உக்கடம் குளக்கரையில் இருந்து துணை மின் நிலையம் வரை பள்ளம் தோண்டப்பட்டு, அதில் உயர் அழுத்த மின்சாரத்தை தாங்கக்கூடிய புதைவட கேபிள் பதிக்கப்பட்டுள்ளன.
அந்த புதைவிட மின்சார கேபிளுக்கு இணைப்பு கொடுப்பதற்காக பெரிய மின் கோபுரம் அமைக்கும் பணி அனைத்தும் நிறைவடைந்து உள்ளது. இதையடுத்து, புதைவிட மின்சார கேபிளுக்கு இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணி நடக்கிறது.
இதுகுறித்து கோவை மாநகர் மையக்கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :- உக்கடம் மேம்பால பணிக்காக 110 கிலோ வாட் திறன் கொண்ட புதைவடை மின்சார கேபிள் பதிக்கும் பணி நிறைவடைந்து உள்ளது. மின் இணைப்பு கொடுத்து பரிசோதனை செய்யும் பணி நடைபெற உள்ளது/ இதை ஒட்டி சில நேரங்களில் உக்கடம், கரும்புக்கடை போன்ற பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும், என்று இந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.