லாரியில் இருந்து குப்பைகள் கொட்டியதில் சிக்கி பெண் உயிரிப்பு : கோவை மாநகராட்சிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்..!!
Author: Babu Lakshmanan20 April 2022, 4:16 pm
கோவையில் லாரியில் இருந்து குப்பைகள் கொட்டிய போது, அதில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கடந்த 7ம் தேதி டிப்பர் லாரியிலிருந்து குப்பைகள் கொட்டியபோது, சிவகாமி (50) என்ற பெண் குப்பைகளுக்குள் சிக்கி முச்சுத்திணறி உயிரிழந்தார். ஒப்பந்த அடிப்படையில் மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 15 நாட்களில் உரிய விசாரணை நடத்தி விளக்கம் அளிக்க கோரி கோவை மாநகராட்சி ஆணையாளர், கோவை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குப்பைகள் பொறுக்கும் பணியில் ஈடுபடுத்திய தனியார் நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற்றுத்தரக்கோரி, தன்னார்வ அமைப்புகள் அளித்த புகாரின் பேரில் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
0
0