காதலை பிரேக்அப் செய்த இளம்பெண்.. போட்டோவை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர் கைது…!!

Author: Babu Lakshmanan
2 April 2022, 12:36 pm

கோவை : இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாவில் பதிவு செய்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

காதலிக்க மறுத்த பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றிய நபரை கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை அடுத்த பிரஸ் காலனி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த கோபிநாதன் என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இளம் பெண் காதலை முறித்துக்கொண்டதாக தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த கோபிநாதன் அந்த இளம்பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கோவை மாவட்டம் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபிநாதனை கைது செய்து, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Shine Tom Chacko jumps out of hotel window to escape from police during drug raid போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!