கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி… கோவையில் செயல்படாத குறிப்பிட்ட தனியார் பள்ளிகள்… வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவர்கள்..!!

Author: Babu Lakshmanan
18 July 2022, 9:33 am

கோவையில் ஒரு சில பள்ளிகளைத் தவிர பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கம் போல இன்று செயல்படுகின்றன.

கோவை மாநகரில் பெரும்பாலான பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என
பெற்றோர்களுக்கு அந்தந்த பள்ளிகள் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அளிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட துவங்கியுள்ளன.

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக தனியார் பள்ளிகளின் சில அமைப்பினர் பள்ளிகள் இன்று செயல்படாது எனக் கூறி விடுமுறை என அறிவித்திருந்தது. இதற்கு கல்வித் துறை இயக்குனரகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கோவையிலும் பள்ளிகள் இன்று செயல்படாது என தகவல் பரவியது. இதனால் பெற்றோர்கள் பள்ளிகளின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவராததால் குழப்பத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை கோவை மாநகரில் பெரும்பாலான பள்ளிகள் வழக்கம்போல செயல்பட துவங்கி உள்ளன. பெரும்பாலான பள்ளி பேருந்துகளும் வழக்கம் போல இயங்கி வருகின்றன. மாணவர்களும் வழக்கம் போல பள்ளிகளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இப்படி இருக்க கோவை பீளமேடு அருகே உள்ள நேஷனல் மாடல் தனியார் பள்ளி மற்றும் வித்யா நிகேதன் பள்ளி இன்று பள்ளிக்கு விடுமுறை என அறிவித்துள்ளது. இதனால் பள்ளியின் நுழைவாயில் கதவு அடைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த பள்ளி விடுமுறை என குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பியும், மற்ற பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல இயங்குவதால் சில பெற்றோர்கள் நேஷனல் மாடல் பள்ளியில் இன்று பள்ளி செயல்படுகிறதா என்ற சந்தேகத்தில் என்று விசாரித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 707

    0

    0