‘அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று இருந்த காலம் மாறிவிட்டது’ : மகளிர் தின விழாவில் கோவை மேயர் பேச்சு!!

Author: Rajesh
8 March 2022, 4:53 pm

கோவை: சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு மணியகாரன் பாளையத்தில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயர் கல்பனா பங்கேற்று பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கோவை மணியகாரன் பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில், தலைமை தாங்கிய மேயர் கல்பனா ஆனந்தகுமார் பேசுகையில்,
அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று இருந்த காலம் மாறி, பேரறிஞர் அண்ணா அவர்களின் கல்வி திட்டத்தால் படித்து முன்னேற்றம் கண்டனர். தலைவர் கலைஞர் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கினார். இப்போது பெண்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்ற நிலை உள்ளது.

நான் கோவை மாநகராட்சியின் முதல் மேயராக பொறுப்பேற்றுள்ளதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மாணவிகளாகிய நீங்கள் தைரியத்துடன் வாழ வேண்டும்.

எந்த பிரச்சினைகள் என்றாலும் , எந்த நேரம் என்றாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். நன்றாக படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ், டாக்டர், என்ஜினியர் என பல உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும். என்றார்.

இதைத்தொடர்ந்து, மாணவிகளுக்கு நாப்கின், மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களான சானிடைசர் உள்ளிட்ட பொருட்களை மேயர், மாணவிகளுக்கு வழங்கினார்.

மேலும்,சென்னையில் உலக சிலம்பம் சங்கம் மூலம் நடைபெற்ற இந்திய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் முதலிடம் பிடித்த 8 ம் வகுப்பு மாணவி சபீதா, 3 ம் இடம் பிடித்த 4 ம் வகுப்பு மாணவி தாரணி ஆகியோருக்கு, மேயர் வாழ்த்து தெரிவித்து பரிசுகளை வழங்கினார். மேலும் அந்த மாணவிகள் சிலம்பம் சுற்றி காண்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிச்செல்வன், 31 வது, வார்டு மாமன்ற உறுப்பினர் வைர முருகன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் உமாகாந்தன், வர்த்தக அணி எம் எஸ்எம் தங்கவேல், பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர் ரங்கசாமி, சுந்தர்ஹாசீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!