கேரளாவில் கடலில் மூழ்கி கோவை மருத்துவக்கல்லூரி மாணவர் பலி.. சுற்றுலா சென்ற போது சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2024, 1:04 pm

கேரளா மாநிலம், திருசூர் மாவட்டம் தலிகுளம், ஸ்னேகதீரம் பீச்சின்வடக்கே அரபத் என்ற இடத்தில் இருவர் கடலில் குளித்த நிலையில் ஒருவர் அலையில் சிக்கி பலியானார்.

மேலும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். விசாரணையில் உயிரிழந்தவர் கடலூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பது தெரியவந்துள்ளது.

இவர் கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் என்பது தெரியவந்துள்ளது.

நேற்று ஞாயற்றுகிழமை மாலை 4 மணிக்கு இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு கார்களில் நண்பர்கள் 9 பேர் சுற்றுலா வந்ததுள்ளனர்.

மேலும் படிக்க: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வரலாறு படைத்த இந்திய அணி : மனம் நெகிழ்ந்து பேசிய தங்கமகன் குகேஷ்..!!

இதில் நண்பர்கள் 6 பேர் கடலில் இறங்கி குளித்துள்ளனர். எதிர்பாராத விதமாக அபிஷேக், ஹசன் ஆஷிக் ஆகியோர் அலையில் சிக்கிய நிலையில் ஹசன் ஆஷிக் என்பவரை ஸ்னேகதீரத்தில் பணியில் இருந்த பபீஸ்ஷ், ஐசக், சிஜு ஆகிய லைப்கார்டு வீரர்கள் ஹசன் ஆஷிகை உயிருடன் மீட்டனர்.

Kerala news tamil - Update News

மேலும் அபிஷேக்கை மீட்கப்பட்ட நிலையில் மருத்துமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்துள்ளார். அபிஷேக் கடல் அலையில் சிக்கி அரைமணி நேரத்திற்கும்மேல் ஆகியதாக தெரியவந்துள்ளது. சம்பவம் அறிந்த வாடானபள்ளி காவல்நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 435

    0

    0