வணிகர் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம் : கோவை மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் பேச்சு

Author: Babu Lakshmanan
5 May 2022, 7:28 pm

கோவை : வணிகர் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம் என்று வர்த்தகர் தினவிழாவில் கோவை மாவட்ட வர்த்தக சங்கம் தலைவர் முத்துப்பாண்டி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் வர்த்தகர் தினவிழா நீலம்பூர் ஸ்ரீதேவி ஜெயம் ஹாலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார்.

இந்த விழாவில் தலைமை தலைவர் முத்துப்பாண்டி பேசும்போது :- இந்த சங்கம் முழுக்க முழுக்க வணிகர்களின் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. கொரோனா பேரிடர் காலத்தில் துப்புரவு பணியாளர்கள் உட்பட பலருக்கு உணவு, கபசுரநீர், தினமும் சுண்டல் ஆகியவற்றை நாம் வழங்கினோம். இந்த கோடை காலம் துவங்கியது முதல் 100 நாட்கள் நீர்மோர் வழங்க வேண்டும் என்ற திட்டத்தை துவக்கி 64 நாட்களை தற்போது
கடந்து உள்ளோம்.

இன்னும் பல்வேறு பொதுமக்கள் சார்ந்த நலத் திட்டங்கள் அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறோம். இன்னும் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்த்து நமது சங்கத்தை அனைவரும் வலுவடைய செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவாக இருந்தாலும் சிறப்பான முறையில் நடைபெற்று உள்ளது, என்றார்.

இந்த விழாவில் சின்னியம்பாளையம் கிளை தலைவர் சுடலைமணி, செயலாளர் முத்து, பொருளாளர் ரமேஷ், அவை பொறுப்பாளர் ஜெபராஜ், காட்டம்பட்டி தலைவர் பிரகாஷ், செயலாளர் சரவணன் , பொருளாளர் ஜெப சீலன் மற்றும் தென்னம்பாளையம் பகுதி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் துணைத்தலைவர் ராஜசேகர் நன்றியுரை வழங்கினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்