ஐஏஎஸ் மாற்றம் : கோவையிலும் முத்திரையை பதிப்பாரா புதிய ஆட்சியர் பவன்குமார்?

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2025, 11:29 am

கோவை மாவட்ட நிர்வாகத்தில் திடீர் மாற்றமாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் இருவரும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

புதிய மாவட்ட ஆட்சியராக பவன்குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஏற்கனவே திருப்பூர் மாநகராட்சி ஆணையராக சிறப்பாக பணியாற்றியவர். 2023 ஆம் ஆண்டில், கிராந்திகுமாருக்கு பதிலாக அவர் அங்கு ஆணையர் பொறுப்பேற்றார்.

இதையும் படியுங்க: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.. திரண்டு வந்த பக்தர்கள் : களைகட்டிய கோவை!

தற்போது, அதே பாணியில் கோவையிலும் கிராந்திகுமாருக்கு பதிலாக புதிய ஆட்சியராக பொறுப்பேற்கிறார். பவன்குமாரின் நியமனம், கோவை மாவட்ட நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது முந்தைய பணிகளில், நிர்வாகத் திறமை மற்றும் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறை வெளிப்பட்டதால், கோவையிலும் அவர் தனது முத்திரையை பதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Coimbatore New collector Pawan kumar Ias

இந்த மாற்றத்திற்கான காரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், நிர்வாக ரீதியான மாற்றங்கள் அல்லது வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  • Simbu Nayanthara Vallavan shooting incident நயன்தாரா-சிம்பு செய்த காரியம்…போனை பார்த்ததும் தயாரிப்பாளர் ஷாக்..!
  • Leave a Reply