எத்தனை முறை சரி செய்தாலும் தொடரும் விபத்து : உயிர் பலி வாங்கும் கோவை புதிய மேம்பாலம்… காவல் ஆணையர் ஆய்வு!!
Author: Udayachandran RadhaKrishnan14 July 2022, 5:55 pm
கோவை : திருச்சி சாலையில் அமைந்துள்ள புதிய பாலம் மேலும் ஒரு இளைஞரின் உயிரை பறித்ததுள்ளது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் திருச்சி சாலையில் புதிதாக கட்டப்பட்டு பயணிகளின் பயன்பாட்டு முதலமைச்சர் அவர்களால் வீடியோ காணொளி மூலம் திறக்பட்டது. ஆனால் பயன்பாட்டுக்கு வந்த சில நாட்களிலேயே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பாலத்தின் மேலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்து சுயநினைவின்றி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதனால் திருச்சி சாலை புதிய பாலத்தை கோவை துணை ஆணையர் மற்றும் நெடு்சாலை துறையினர் பார்வையிட்டு முன்னெச்சரிக்கையாக பாலத்தில் மேல் வேகத்தடை அமைத்து வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ள முன்னெச்சரிக்கையாக எச்சரிக்கை பலகைகள் மற்றும் பதாகைகள் பொருத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் மேலும் மற்றொரு விபத்து அதே இடத்தில் ஏற்பட்டுள்ளது . ஆனந்த குமார் (வயது 42) என்பவர் சிங்காநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு பாலத்தில் மேலிருந்து கீழே விழுந்து தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழதுள்ளார் எனக் குறிப்பிடப்படுகிறது.
மேலும் பாலத்தின் மேல் வாகன ஓட்டிகள் செல்லும்போது பலத்த காற்று அடித்து இழுத்து செல்வதே விபத்து ஏற்பட காரணமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பாலம் அமைப்பதற்கான சரியான திட்டமிடல் இல்லாமல் போனதே விபத்துக்கான காரணம் என சாலை பயணிகள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.