கோவையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்… வெளியான சிசிடிவி காட்சி.. 5 பேர் கைது!!

Author: Babu Lakshmanan
13 March 2023, 2:32 pm

கோவை : கோவை டவுன்ஹால் பகுதியில் வட மாநில நபர்களை மர்ம நபர்கள் தாக்கியதாக வட மாநில தொழிலாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதாகவும், அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று கோவை டவுன்ஹால் பகுதியில் வட மாநில நபர்களை மர்ம நபர்கள் தாக்கியதாக அப்பகுதியில் 100க்கு மேற்பட்டோர் கூடினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும், அருகே இருந்த வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது அனைவரையும் காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு விரட்டியடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கோவையில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இடையர் வீதியை சேர்ந்த சூரியபிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன். ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் விவகாரம் தற்போது தனிந்திருக்கும் நிலையில் இச்சம்பவத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 485

    0

    0