கோவையில் பழங்கால கார் மற்றும் பைக் கண்காட்சி ; 100 பழைய மாடல் வாகனங்களை ஆர்வத்துடன் கண்டுகளிக்கும் மக்கள்!!

Author: Babu Lakshmanan
5 January 2023, 12:15 pm

கோவையில் நடைபெற்ற பழங்கால கார் மற்றும் பைக் கண்காட்சியில், சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள், இருசக்கர வாகனங்கள் காட்சி படுத்தப்பட்டன.

கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோவை விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,இந்த ஆண்டு கோவை விழாவை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள காஸ்மோ கிளப் வளாகத்தில், பழங்கால கார் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர். கண்காட்சியில் கோவை , பல்லடம், திருப்பூர், அன்னூர் , பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் காட்சிப்படுத்தினர்.கண்காட்சியில் சுமார் 100 பழைய மாடல் கார்கள்,பைக்குகள் இடம்பெற்றுள்ளன.

சுதந்திரத்துக்கு முன் பயன்படுத்திய பல்வேறு வகையான கார்கள் முதல் 1980ஆம் ஆண்டு வரையுள்ள பழைய மாடல் கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. பழைய மாடல் பென்ஸ், செவர்லே, ஃபோர்டு, பத்மினி, அம்பாசடர் வோக்ஸ்வேகன், பழைய ஜீப் உள்ளிட்ட கார்கள், புல்லட், ஜாவா, ஸ்கூட்டர் லேம்பர்டா, ஜெடாக் வகை உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக கார்கள் அனைத்தும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வலம் வந்தன. திடீரென பழைய கார்கள் அணிவகுத்து சென்றதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

தொடர்ந்து பழங்கால கார்கள் பொதுமக்களின் பார்வைக்காக சில நாட்கள் வைக்கப்படும் என கோவை விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

  • Jyothika Supports Suriya விஜய் தான் BEST..சூர்யா WORST.. ரசிகருக்கு ஜோதிகா சுடச் சுட பதிலடி.!