குனிந்து கோலம் போட்டுக் கொண்டிருந்த மூதாட்டி… நைஸாக வந்த டிப்டாப் ஆசாமி ; அதிகாலை 3.30 மணிக்கு நடந்த பகீர் சம்பவம்!!

Author: Babu Lakshmanan
4 October 2023, 7:07 pm

கோவையில் அதிகாலை வீட்டு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த மூதாட்டியிடம் 10 பவுன் செயினை டிப் டாப் உடை அணிந்து வந்த வாலிபர் பறித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள செந்தில் ஜனதா நகரை சேர்ந்தவர் கலைவாணி (65). இவர் இன்று அதிகாலை உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, அதிகாலை 3.30க்கு எழுந்து வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த10 பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்றார்.

இது குறித்து கலைவாணி சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

https://player.vimeo.com/video/871061429?badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!