இளைஞர் மீது ஆம்னி பஸ் ஏறி விபத்து… மறித்துப் போன மனிதாபிமான செயலால் பறிபோன உயிர்… அதிர வைக்கும் சிசிடிவி காட்சி

Author: Babu Lakshmanan
17 May 2024, 11:40 am

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு ஆம்னி பஸ் ஏறி படுகாயம் அடைந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் சாலையில் ஓரத்தில் எடுத்து வைத்து விட்டு சென்றதால் உயிரிழந்த வாலிபர் விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தின் முன்பு வாலிபர் ஒருவர் சாலை நடுவே படுத்திருந்துள்ளார். அப்போது, பெங்களூரில் இருந்து உதகைக்கு செல்லும் ஆம்னி பேருந்து ஒன்று, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தை கடந்து உதகை நோக்கி செல்ல வந்துள்ளது.

அந்த பேருந்தை ஓட்டுநர் சிவராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவர் சாலையின் நடுவே வாலிபர் ஒருவர் படுத்திருப்பதை சற்றும் கவனிக்காமல், அவர் மீது ஆம்னி பேருந்தை ஏற்றி இறக்கியுள்ளார். இதில் அந்த வாலிபருக்கே படுகாயம் அடைந்து தலை மற்றும் கை, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டும் அளவுக்கு விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க: தமிழகத்தை போதைப்பொருள் புகலிடமாக மாற்றிய விடியா திமுக அரசு ; இனிமேலாவது…. கொந்தளித்த இபிஎஸ்..!!!

அப்பொழுது, ஆம்னி பேருந்து நிறுத்திய ஓட்டுநர் மற்றும் அவருடன் வந்த சில பேர், பேருந்தில் இருந்து இறங்கி வந்து காயம் அடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த அந்த வாலிபரை பார்த்துவிட்டு உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைக்காமல், அவரை அப்படியே இரண்டு பேர் சேர்ந்து தூக்கி அருகில் இருந்த தடுப்பு சுவர் ஒன்றின் அருகே படுக்க வைத்து விட்டு, மீண்டும் பேருந்து எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதனை அடுத்து வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்தம் வடிந்து கொண்டிருப்பதை பார்த்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார் அந்த வாலிபரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஷாம் டூர் என்ற தனியார் ஆம்னி பேருந்து அந்த வாலிபர் மீது ஏறி இறங்கி ,பின்னர் அவர் சிகிச்சைக்கு அனுப்பாமல் அருகில் தூக்கி படுக்க வைத்து விட்டு சென்ற நபர்கள் குறித்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, ஆம்னி பேருந்தின் ஓட்டுனரான சிவராஜ் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட இத்தகைய செயலால் அடையாளம் தெரியாத அந்த வாலிபரின் உயிர் பறிபோனது. இதுவரை அந்த நபர் யார் என்பது குறித்து தெரியாத நிலையில் அது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…