திமுக தலைமைக்கு கோவையில் வலுக்கும் எதிர்ப்பு : மாற்று கட்சியினருக்கு சீட் ஒதுக்கியதால் திமுகவினர் மறியல்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2022, 4:52 pm

கோவை : பொறுப்பாளர்களுக்கு கவுன்சிலர் சீட் ஒதுக்காமல் மாற்று கட்சியினருக்கு சீட்டு ஒதுக்கியதால் திமுகவினர் உக்கடம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 84 வது வார்டில் திமுக பொறுப்பாளர்களுக்கு சீட்டு ஒதுக்காமல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 84 வது வார்டு கவுன்சிலர் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அப்பகுதி திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், இன்று கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளை கண்டித்து அப்பகுதி திமுகவினர் பைபாஸ் சாலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் போது திமுகவினருக்கு இந்த வார்டில் சீட்டு ஒதுக்க வேண்டுமென கோஷம் எழுப்பினர். உக்கடம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் கேட்கும் இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைமை ஒதுக்குவதாக கோவையில் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

  • VTV Ganesh reveals Thalapathy 69 story தளபதி69 கதையை போட்டுடைத்த விடிவி கணேஷ்…சட்டென மைக்கை பிடுங்கிய பிரபல இயக்குனர்..!