OTT-யில் இதை விட மோசமான படம் எல்லாம் வந்திருக்கு.. தி கேரளா ஸ்டோரி படம் குறித்து கோவை பொதுமக்கள் கருத்து..!!

Author: Babu Lakshmanan
5 May 2023, 7:37 pm

கோவை ; ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களை விட இந்த படம் மோசம் இல்லை என்று கோவையில் தி கேரளா ஸ்டோரி படம் பார்க்க வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ப்ரூக் பாண்டு சாலையில் உள்ள தனியார் வணிக வளாகமான ப்ரூக் ஃபீல்டில் திரையிடப்பட்டது. இதற்கு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று ப்ரூக் ஃபீல்டில் உள்ள திரையரங்கில் ஒரு காட்சி மட்டும் திரையிடப்பட்டது. இதில் 52 பேர் மட்டுமே முன்பதிவு செய்து படத்தை பார்த்தனர்.

இந்த நிலையில், படத்தைப் பார்த்து வெளியே வந்தவர்கள் இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுந்தர்ராஜன் கூறும்போது ;- இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். இந்துவை முஸ்லிமாக கன்வெர்ட் பண்ணுகிறார்கள். இந்தப் படத்தில் நெகட்டிவ் அப்ரோச் ஒன்றும் இல்லை. கல்லூரி பெண்களை லவ் என்ற பெயரில் மயக்குகின்றனர்.

இதை வைத்து பயன்படுத்துகின்றனர். இதுதான் கதை. இந்தக் கதையில் வருவது எவ்வளவு தூரம் உண்மை எவ்வளவு தூரம் பொய் என்று நமக்கு தெரியாது. படம் நல்ல படம். இதை விட மோசமான படம் எல்லாம் வந்துள்ளது.இந்த படம் பெரிய தவறில்லை. ஓடிடியில் இதைவிட மோசமான படங்கள் வருகிறது, என தெரிவித்துள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!