‘என் வீட்டை தரேன்… ஒரு நாள் இங்க தங்கி பார்க்கறீங்களா..?’ டாஸ்மாக் உள்ளே புகுந்து பார் உரிமையாளரை லெப்ட்- ரைட் வாங்கிய மக்கள்…!!!
Author: Babu Lakshmanan23 February 2024, 9:02 pm
கோவை லங்கா கார்னர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு பார் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் பகுதியில் ஆயில் நிறுவனங்கள், கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது.
இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் குடிபோதையில் அங்குள்ள குடியிருப்பு வாசிகள், ஆயில் கடை பெண் ஊழியர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு டாஸ்மாக் கடைக்கு குடிக்க வந்த சிலர், அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். மேலும், இன்று காலையும் சிலர் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் மற்றும் ஆயில் கடை உரிமையாள்ர்கள், ஊழியர்கள் டாஸ்மாக் கடைக்குள் சென்று அங்கிருந்த டாஸ்மாக் பார் உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.