கோவைக்கு பெருமை சேர்த்த காவல் அதிகாரிகள் : 4 அதிகாரிகளுக்கு மத்திய அரசின் பதக்கம்..!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2022, 6:23 pm

கோவை : குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் 18 பேருக்கு மத்திய அரசு பதக்கம் அறிவித்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பணியாற்றும் 4 காவல் அதிகாரிகள் பதக்கங்களை பெற உள்ளனர்.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று மாநில காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு பதக்கங்கள் வழங்கி கவுரவிப்பது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில் மத்திய அரசின் பதக்கம் பெறும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 662 அதிகாரிகள் இந்த பதக்கம் வழங்கப்பட உள்ளது.
இதில், தமிழகத்தில் இருந்து மட்டும் 18 அதிகாரிகள் மத்திய அரசின் பதக்கத்தை பெற உள்ளனர். இவர்களில் ஏ.டி.ஜி.பி.வெங்கடராமன், சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் சிவனருள் ஆகியோர் ஜனாதிபதி பதக்கம் பெறுகின்றனர்.

மேலும், கோவை மாவட்டத்தில் இருந்து 4 காவல் அதிகாரிகள் இந்த பதக்கத்தை பெற உள்ளனர். இதில் கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவராக பணியாற்றி வரும் சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வரும் பிரதீப் குமார், கோவை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முரளிதரன், கோவை மாநகர காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் முருகவேல் ஆகியோருக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 4468

    0

    0