“என் இனிய பொன் நிலாவே”…. சினிமா பாடலை அச்சு அசலாக பாடி அசத்திய காவலர்… வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
23 December 2023, 9:20 am

காவலர் குடும்ப சுயத்தொழில் கண்காட்சியில் “என் இனிய பொன் நிலாவே” பாடலை பாடி அசத்திய ஆயுதப்படை உதவி ஆய்வாளர்.

கோவை காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் குடும்பத்தினரின் சுயதொழில் கண்காட்சி நடைபெற்றது. இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாநகர காவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மேஜிக் ஷோ உட்பட கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கலை நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக இவ்விழாவில் கலந்து கொண்ட கோவை ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ரகுகுமார் “என் இனிய பொன் நிலாவே” என்ற பாடலை பாடி அசத்தினார்.

https://player.vimeo.com/video/897349943?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

இவரது பாடலை கேட்ட அனைத்து காவலர்களும் அவர்களது குடும்பத்தினரும் அவரை வெகுவாக பாராட்டினர்.

  • Keerthy Suresh new glamorous look தாலியுடன் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 12972

    2

    0