திமுக இளம்பெண் கவுன்சிலர் ராஜினாமா ; உட்கட்சி பூசல்தான் காரணமா…? பொள்ளாச்சி நகர சபை கூட்டத்தில் சலசலப்பு!!

Author: Babu Lakshmanan
24 December 2022, 2:23 pm

கோவை : பொள்ளாச்சியில் நகர சபை கூட்டத்தில் திமுக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சம்பவத்திற்கு உட்கட்சி பூசல்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

பொள்ளாச்சி நகராட்சியின் சாதாரண நகர மன்ற கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் தலைவர் மற்றும் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. 36 வார்டுகளை கொண்ட பொள்ளாச்சி நகராட்சியில் 32 வார்டுகளில் திமுகவும் மூன்று வார்டுகளில் அதிமுகவும் ஒரு வார்டில் சுயேச்சை ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஏழாவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நர்மதா கண்ணுச்சாமி, தனது பதவியை நகராட்சி கூட்ட அரங்கில் ராஜினாமா செய்யப் போவதாக அறிவிக்கப் போவதாக இருந்தார்.ஆனால் கூட்டத்தில் 47 தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட இருந்தது.

திடீரென அனைத்து தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஐந்து நிமிடம் கூட நடைபெறாத கூட்டத்தில் தனது ராஜினாமாவை எவ்வாறு அறிவிப்பது என்பது தெரியாமல் நகராட்சி ஆணையாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இளம் நகரமன்ற தலைவரான நர்மதா கண்ணுச்சாமியின் ராஜினாமாவுக்கு திமுகவில் நடக்கும் உச்சக்கட்ட கோஷ்டி பூசல் தான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. நர்மதா கண்ணுச்சாமியை நகர மன்ற தலைவராக முன்மொழியப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தற்போதைய நகர செயலாளர் நவநீத கிருஷ்ணனின் மனைவி சியாமளா அறிவிக்கப்பட்டார்.

இதனால் நர்மதா கண்ணுசாமி அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, கடந்த சில நாட்களாக நகர மன்ற கூட்டத்திலும், கட்சி கூட்டத்திலும் பங்கேற்காமல் தவிர்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தனது வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகளை நகர மன்ற தலைவர் தடுத்து வருவதாக கட்சி நிர்வாகிகளிடம் அவர் கூறி வந்ததாகவும், இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த நர்மதா கண்ணச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்ததாக தெரிகிறது.

பொள்ளாச்சியில் நகர சபை கூட்டத்தில் திமுக நகர மன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அதேவேளையில், பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நகராட்சியின் சாதாரண மன்ற கூட்டத்தில், நகர மன்ற தலைவரை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து, பட்டை நாமம் போடும் திமுக தலைவர் என்று கோஷம் இட்டதால், பதிலுக்கு திமுகவினரும் கோசம் எழுப்பியதால் நகர மன்ற கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 538

    0

    0