காவல்நிலையம் செல்லும் வழியில் தப்பியோடிய கைதி… அதிர்ச்சி தாங்காமல் மயங்கி விழுந்த காவலர்..!!

Author: Babu Lakshmanan
20 June 2022, 2:24 pm

கோவை : காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது காவலரை தள்ளி விட்டு தப்பி ஓடிய கைதியை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

இரண்டாம் நிலை காவலர் அஷ்ரப், அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஜீவா என்பவரை ஆர்எஸ் புரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஜீவா காவலரை தள்ளிவிட்டு ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள அம்மணி அம்மாள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து தப்பிக்க முயன்றார்.

தொடர்ந்து, ஜீவா தடுப்புச் சுவரை தாண்டி குதிக்கும் பொழுது தவறி விழுந்தார். இதைத்தொடர்ந்து அவரை பிடிக்க சென்ற காவலரும் அதிர்ச்சியில் திடீரென மயங்கினார். பின்தொடர்ந்து வந்த ஆர்எஸ் புரம் போலீசார் மயங்கி விழுந்த காவலரை தண்ணீர் தெளித்து எழுப்பினர். தொடர்ந்து தப்பித்துச் செல்ல முயன்ற குற்றவாளி ஜீவாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று வந்துள்ளனர்.

கைதி தப்பி ஓடிவிட்டால் பணியிடை நீக்கம் செய்யப்படுவிடுவோமோ என்ற அச்சத்தில் ஏற்பட்ட ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்தார் என கூறப்படுகிறது. காவலர் நலமுடன் உள்ளதாக ஆர் எஸ் புரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 675

    0

    0