ஜுனியருக்கு மொட்டை அடித்து ராகிங்… கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் அதிர்ச்சி சம்பவம் ; 7 சீனியர்கள் கைது…!!

Author: Babu Lakshmanan
8 November 2023, 9:31 am

கோவையில் ஜூனியர் மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங்கில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை அவிநாசி சாலையில் இயங்கி வருகிறது பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி. தமிழக அளவில் அதிகளவில் நன்கொடை பெறும் கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். இங்கு பெரும் வசதி படைத்தவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளின் வாரிசுகளே பெரும்பாலும் பயின்று வருகின்றனர்.

இப்படியிருக்கையில், இந்தக் கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவர்கள் முதலாம் ஆண்டு ஜூனியர் மாணவர் ஒருவரிடம் மது அருந்த பணம் கேட்டு, அவருக்கு மொட்டை அடித்து ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவரின் பெற்றோர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் ராகிங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்களான மாதவன், மணி, வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், சந்தோஷ், யாலிஸ் ஆகிய 7 பேரை பீளமேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும்புள்ளிகளின் வாரிசு பயின்று வரும் இதுபோன்ற கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?