பொள்ளாச்சியை மிஞ்சிய பலாத்கார சம்பவம்… வேலைக்கு அழைத்துச் செல்லும் வேனில் பெண்கள் பலாத்காரம்… பகீர் ஆடியோ!!
Author: Babu Lakshmanan2 June 2022, 12:34 pm
பாலியல் கும்பலைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட பெண்ணை அச்சுறுத்தும் விதமாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் பெண்கள் சமீபத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்தனர். அதில், தாங்கள் பணியாற்றி வரும் நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் வாகன ஓட்டுநர்களாக பணியாற்றிய நரேன், ராஜ்குமார் மற்றும் அப்துல் ஹமீது ஆகியோர் வேலைக்கு வரும் வாகனத்தில் வைத்தும், வெளியே பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றும், பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், ஒப்பந்த ஓட்டுநர்களான அப்துல் ஹமீது, ராஜ்குமார் ஆகிய ஓட்டுநர்கள், திருமணமானதை மறைத்து, பணிப் பெண்களை காதல் வலையில் வீழ்த்தியதாகவும், இருவரும் பெண்களை ஏமாற்றி ஊட்டிக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறியுள்ளனார். மேலும், இதுபோன்று பலரிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பணத்தையும், வாழ்க்கையையும் நாசமாக்கியுள்ளதாகவும், இதைப் பற்றி நிர்வாகத்திடம் கூறினால் அவர்கள் கண்டுகொள்வதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது பற்றி பாலியல் பலாத்கார கும்பலைச் சேர்ந்த அப்துல் ஹமீத், பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டியுள்ளார். அதாவது, ஊட்டிக்கு வந்தும் என்னிடம் நீ தப்பித்து விட்டதால் இந்த ஆட்டம் போட்டு வருகிறாய் என்றும், ஏற்கனவே அதே அறையில் பலருடன் உல்லாசத்தை அனுபவித்தவன் நான் என்று கூறியுள்ளார்.
மேலும், உனக்கு தெரிந்த நபரின் போட்டோ அனுப்புகிறேன், பார் என்று கூறி, புகாரளித்த பெண்ணின் தோழியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பியுள்ளார் அப்துல் ஹமீத்.
உனக்கு மனசாட்சி இருக்கா..? எத்தனைப் பேரைத்தான் இப்படி ஏமாற்றுவாய் என்று பாதிக்கப்பட்ட பெண் கேள்வி கேட்டதற்கு, ‘நான் ஆம்பள அப்படித்தான் உல்லாசமாக இருப்பேன், என்னை கேட்க யாருக்கு தைரியம் இருக்கு. ராஜ்குமார், சிவரஜ்சனி, நரேன் ஆகியோருடன் சேர்ந்து நாங்கள் அனுபவிக்கும் உல்லாசத்தை யாராவது தடுத்தால் அவர்களை கொன்று விடுவோம்,’ என்று மிரட்டியுள்ளார்.
அதோடு, இரவு பணி முடிந்து வரும் பெண்களை அழைத்துச் செல்ல, தாங்கள் ஓட்டும் வாகனங்களில் செக்யூரிட்டிகளை நரேன், அப்துல் ஹமீது ஆகியோர் தடுத்து நிறுத்துவதாகவும், செல்லும் வழியில் வாகனத்தில் இருக்கும் மின்விளக்கை அணைத்து விட்டு பெண்களிடம் சில்மிஷம் செய்வதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிர்ச்சி புகார் அளித்துள்ளனர்.
இவர்களின் செல்போனை விசாரணைக்கு உட்படுத்தினால் பல்வேறு ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் வெளியாகும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், மேலும் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், காவல்துறையினர் இந்த வழக்கை சரியாக விசாரிக்க தவறியதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண், பாலியல் கும்பலின் மிரட்டலுக்கு அடிபணிந்து புகாரை மாற்றி எழுதிக் கொடுத்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பெண்ணிடம் பாலியல் கும்பலைச் சேர்ந்த நபர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பொள்ளாச்சி சம்பவத்தை மிஞ்சும் அளவிலான மற்றொரு பலாத்கார சம்பவம் கோவையில் சத்தமில்லாமல் அரங்கேறி வருவது பணிக்கு செல்லும் பெண்களின் குடும்பத்தினரிடையே கொலை நடுங்கச் செய்துள்ளது. எனவே, இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.