கோவையில் தனியார் குடோனில் ரேசன் அரிசி பதுக்கல் : 3.25 டன் ரேசன் அரிசி பறிமுதல்… குடோன் உரிமையாளருக்கு வலைவீச்சு…!!

Author: Babu Lakshmanan
7 March 2022, 8:14 pm

கோவை வடவள்ளி அருகே தனியார் குடோனில் ரேசன் அரிசி பதுக்கிய நிலையில், 3.25-டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை வடவள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் ரேசன் அரிசிகளைச் சேகரித்து, அதை அதிக விலைக்குக் கேரளாவிற்கு விற்க கடத்தப்படுவதாக குடிமைப் பொருட்கள் வழங்கல் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோவை வடவள்ளி சாலை பி.என்.புதூர் பகுதியில் உள்ள முத்துக்குமார் என்பவருக்குச் சொந்தமான குடோனில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது குடோன் உள்ளே தலா 50-கிலோ எடை கொண்ட 65- பேக்குகளில் 3.25-டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, குடோனில் இருந்த அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் குடோனை வைத்திருந்த முத்துக்குமாரைத் தேடி வருகின்றனர்.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!