இரு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை… ரைஸ் மில் ஓனரின் விபரீத முடிவு ; கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
20 March 2024, 5:13 pm

கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்கு பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்குபாளையம் பகுதியில் மணி ரைஸ் மில் நடத்தி வருகிறார் ராமச்சந்திரன். தொழில் இல்லாத காரணத்தினாலும் கடன் தொல்லையினாலும் ராமச்சந்திரன், அவரது மனைவி விசித்ரா, மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகிய 4 பேர் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாத நிலையில் இருந்ததால், அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில், போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த பொழுது, நான்கு பேரும் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

முதல் கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் இவர்கள் தற்கொலை செய்து கொண்ட உள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் செல்வபுரம் காவல்துறை சென்று அங்கு உயிரிழந்து உள்ள நான்கு பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், செல்வபுரம் காவல்துறையினர் நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பிறகு இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது தெரியவரும்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 310

    0

    0