கோவை ஆர்டிஓ அலுவலகத்தில் விடிய விடிய நடந்த சோதனை : சிக்கிய ரொக்கம்.. சூடுபிடிக்கும் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2023, 10:50 am

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனைசெய்தனர்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்சஒழிப்புதுறை இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலிசார் சோதனை நடத்தினார்.

இந்த சோதனையின் போது அலுவலகத்தின் உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறைகள், மேஜைகள், குப்பைதொட்டிகள், ஓய்வறைகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வரி வசூல் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூபாய் 60 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணம் தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வரிவசூல் மைய அதிகாரி ராஜேஸ்வரியிடமிருந்து பணம் கைப்பற்றப்பட்டதாகவும், விசாரணையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் முத்துராமலிங்கம், மற்றும் சங்கர் ஆகியோர் வலியுறுத்தலின் பேரில் பொதுமக்களிடம் லஞ்சமாக பணம்பெற்றதாக லஞ்ச ஒழிப்புதுறையினரிடம் ராஜேஸ்வரி தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!