கோவை : கோவை சாய்பாபா கோவிலில் உள்ள ஸ்ரீ நாகசாய் மந்திர் ஆலயத்தில் நாளை மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வரும் 01.02.2023 ஆம் தேதி மேட்டுப்பாளையம் ரோடு ஸ்ரீநாகசாய் மந்திர் சாய்பாபா கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் காலை 4.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
(A) பொது வாகனங்கள் – கோவையில் இருந்து சிந்தாமணி, Home Science வழியாக மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் இடது புறம் திரும்பி பாரதிபாரக் சாலை, GCT, தடாகம் சாலை, இடையர் பாளையம், கவுண்டம்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம்.
(B) கோவிலுக்கு வரும் வாகனங்கள் – கோவையில் இருந்து சிந்தாமணி, HOME SCIENCE வழியாக கோவிலுக்கு வரும் வாகனங்கள் பாரதி பாரக் சாலையிலிருந்து வலது புறம் திரும்பி ராஜா அண்ணாமலை சாலை வழியாக இராமலிங்கம் செட்டியார் பள்ளி வளாகத்தில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்லலாம்.
(A) பொதுவாகனங்கள் – மேட்டுப்பாளையம், துடியலூர், கவுண்டம்பாளையம் பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சங்கனூர் சோதனைச் சாவடியில் இடது புறம் திரும்பி கண்ணப்ப நகர் புறக்காவல் நிலையம், தயிர் இட்டேரி, சிவானந்தா காலனி வழியாக நகருக்குள் வரலாம்.
(B) கோவிலுக்கு வரும் வாகனங்கள் – மேட்டுப்பாளையத்திலிருந்து கோவிலுக்கு வரும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும் மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிலையம், அதற்கு அருகாமையில் உள்ள பூண்டு குடோன் ஆகிய வாகனம் நிறுத்தும் இடங்களிலும், இருசக்கர வாகனங்கள் அனைத்தும் HIPCO மோட்டார் கம்பெனி வளாகத்திலும் நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்லலாம்.
மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிறுத்தத்தைத் தாண்டி எந்த வாகனங்களும் செல்ல
இயலாது.
(A) பொதுவாகனங்கள் – காந்திபுரத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் GP சிக்னல், சத்தி ரோடு, நம்பர் 3 பேருந்து நிறுத்தம் (கணபதி), சங்கனூர் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடையலாம்.
(B) கோவிலுக்கு வரும் வாகனங்கள் – காந்திபுரத்திலிருந்து கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கிராஸ்கட் ரோடு, சிந்தாமணி சந்திப்பு, HOME SCIENCE வழியாக சென்று ராஜா அண்ணாமலை ரோட்டில் வலதுபுறம் திரும்பி அழகேசன் சாலையில் உள்ள இராமலிங்கம் செட்டியார் பள்ளிவளாகத்தில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்லலாம்.
(A) பொதுவாகனங்கள் – தடாகம், கணுவாய், இடையர்பாளையம் பகுதியிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கோவில்மேடு சோதனைச் சாவடி, அவிலா கான்வென்ட், GCT, லாலிரோடு வழியாக நகருக்குள் வரலாம்.
(B) கோவிலுக்கு வரும் வாகனங்கள் – தடாகம், கணுவாய், இடையர்பாளையம் பகுதியிலிருந்து கோவிலுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் அவிலா கன்வென்டிலிருந்து இடது புறம் திரும்பி NSR ரோட்டில் SBI-யில் வலது புறம் திரும்பி இராமலிங்கம் செட்டியார் பள்ளி வளாகத்தில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்லலாம்.
பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தாற்போல் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் தங்களது பயணப் பாதையை திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.சாலையோர பார்கிங் முற்றிலும் தடை செய்யய்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டும் வாகனங்களை நிறுத்த
அனுமதிக்கப்பட்டூள்ளது.
பொது மக்கள் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப வாகன ஓட்டிகளும், பக்தர்களும் ஒத்துழைப்பு கொடுத்து தங்களது பயணத்தை விரைவாக மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.