பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஹரி. இவர் அதே பகுதியைச் சார்ந்த 11ஆம் வகுப்பு மாணவியிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த 11-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தைக்கு கூறி நேற்று வெளியே அழைத்துச் சென்றுள்ளார். மாலை நீண்ட நேரம் ஆகியும் மாணவி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் காவல் நிலையத்தினர், பீளமேடு பகுதி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இருவரையும் அழைத்து வந்து, சூலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கல்லூரி மாணவன், பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரிய வந்தது. பின்னர் கல்லூரி மாணவன் அருள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…
அரியலூர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும்…
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
This website uses cookies.