பாம்பை கொன்று விழுங்கிய நாக பாம்பு… வீட்டில் பதுங்கிய பாம்பை பிடித்த பம்புபிடி வீரர்கள்.. ஷாக் வீடியோ!!

Author: Babu Lakshmanan
27 December 2023, 9:36 pm

பாம்பை கொன்று விழுங்கிய நாக பாம்பை பம்புபிடி வீரர்கள் இலாவகமாக பிடித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை – போத்தனூர் பகுதியில் ஒரு வீட்டில் பாம்பு பதுங்கி இருப்பதாக, பாம்பு பிடி வீரர்களான மோகன் மற்றும் ராம் இருவருக்கு தகவல் தரப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர்கள் சமையல் அறையில் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் உள்ளே நாக பாம்பு இருந்துள்ளது.

உடனே வாலை பிடித்து பத்திரமாக பாம்பை வெளியே எடுத்த பொழுது, எதிர் முனையிலும் ஒரு வால் தெரிந்து இருக்கிறது. பின்பு உற்று நோக்கிய பொழுது, அந்த பாம்பு வேறு ஒரு பாம்பை விழுங்கி இருப்பதை பார்த்தனர். வழக்கமாக பாம்புகளை பிடித்தவுடன் அது வேகமாக ஓட முயற்சிக்கும்.

https://player.vimeo.com/video/898138108?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

இந்த நிலையில், பாம்பை கக்க ஆரம்பித்து முழுமையாக கக்கியது.இதில் வெள்ளி கோல் வரியான் எனும் விசமற்ற பாம்பை, நாகப்பாம்பு விழுங்கியது தெரியவந்தன. நாகப்பாம்பை மீட்ட பாம்பு பிடி வீரர்கள் மோகன் மற்றும் ராம் பாட்டிலில் பாதுகாப்பாக அடைத்து அதனை பத்திரமாக வனத்துறை ஊழியர்களிடத்தில் ஒப்படைத்தனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu