தனிவீட்டில் அடைத்து மாற்றுத்திறனாளி பெண் வன்கொடுமை..? திருமணமாகாமலே 3 குழந்தைகளுக்கு தாயான அதிர்ச்சி.. விசாரணையில் போலீசார்!!
Author: Babu Lakshmanan23 June 2022, 9:32 am
கோவையில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த திருமணமாகாத மாற்றுத்திறனாளி பெண், பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பேரூர் அருகே உள்ள பாதியளவு கட்டிமுடிக்கப்பட்ட வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரும், அவருடன் ஒரு ஆண் வசித்து வருவதாகவும், அந்த பெண் பாலியல் ரீதியாக துண்புறுத்தப்படுகிறாரா? என்ற சந்தேகம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கிடைத்த தகவல் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரண் உத்தரவின் பேரில், சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் தங்கமணி தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது புகாரில் தெரிவிக்கப்பட்டது போலவே, சிறிய வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் இருந்துள்ளார்.
அப்போது அங்குச் சென்ற அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கடந்த 2018 – 2020 ஆண்டுக்குள் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் பிறந்தது தெரியவந்தது. மேலும், தற்போது இருக்கும் அந்த வீட்டில் கடந்த 6 மாதங்களாக வசித்து வருவதாகவும், கடந்த சில நாட்களுக்கு அந்த பெண்ணிற்கு மூன்றாவது குழந்தையும் பிறந்ததாகவும் அந்த குழந்தை உக்கடம் பகுதியில் உள்ள காப்பாகத்தில் இருப்பதும் தெரியவந்தது.
மேலும், திருமணம் ஆகாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் ரீதியாக துண்புறுத்தியது யார்? அவருடன் வசித்து வந்தவர் அவரது தந்தையா? என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணும் உடல் ரீதியாக வழுவில்லாமல் இருந்ததால், அவரை மீட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் நல்லாம்பாளையத்தில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
இதையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்தபுகார் அடிப்படையில் பேரூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0