தேசிய அளவிலான மலைப்பகுதி சைக்கிள் போட்டியில் கோவை மாணவி அசத்தல் : தங்கம், வெள்ளி பதக்கங்கள் குவித்து சாதனை!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2023, 3:33 pm

கடந்த 28, 29 ஆகிய இரு தேதிகளில் ஹரியானா மோர்னி மலையில் தேசிய அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 18 வயதிற்கு கீழானவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கோவையை சேர்ந்த 8ம் வகுப்பு ஹாசினி என்ற மாணவி கலந்து கொண்டு வெள்ளை மற்றும் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

இவர் கடந்த ஐந்து வருடங்களாக இதற்காக பயிற்சி மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு சைக்கிள் அசோசியேசன் மற்றும் கோயமுத்தூர் சைக்கிள் அசோசியேசன் இவர் இந்த போட்டியில் பங்கேற்க உதவி புரிந்துஉள்ளனர்.

வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவிக்கு கோவை விமான நிலையத்தில் அவரது உறவினர்கள் மற்றும் கோயமுத்தூர் சைக்கிள் உள்ளிட்டோர்ர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஹேலோ இந்தியாவில் தங்க பதக்கமும் வென்றுள்ளதும் பல்வேறு ட்ராக் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை வென்று உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  • good bad ugly first show in madurai is in trouble அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்