பிரச்சாரத்தின் போது அதிமுக – பாஜக மோதல்… அண்ணாமலை வாகனத்தை சிறைபிடித்த அதிமுக வேட்பாளர்.. கோவையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
6 April 2024, 8:24 am

சூலூரில் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சிறைப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நாடாளுமன்ற தொகுதி அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக, பாஜக ஆகிய இரு தரப்பினரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தொட்டிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், சூலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க: திமுகவால் முடியுமா..? எனக் கேள்வி எழுப்பியவர்களுக்கு தக்க பதிலடி ; காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து CM ஸ்டாலின் கருத்து..!!

அப்போது, அதே பகுதியில் பிரச்சாரத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்துள்ளார். அதிமுகவின் பிரச்சார வாகனத்தை பாஜக பிரச்சார வாகனம் ஒன்று உரசி விட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சட்டமன்ற கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறை பிடித்து சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: அந்தம்மா ஒருதடவையாவது வந்திருக்கா…? போதை ஆசாமி அடுக்கடுக்கான கேள்வி… ஓட்டு கேட்டு வந்த திமுக எம்எல்ஏ திணறல்…!!!

தாங்கள் குறித்த நேரத்தில் பிரச்சாரத்திற்கு வந்துள்ளதாகவும், பாஜகவினர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து மாதப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதித்துள்ளதாகவும் அதிமுகவினர் குற்றம் சாட்டினர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 312

    0

    0