ஆர்ப்பரித்து கொட்டும் குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய்… பொதுமக்கள் செல்ல தடை விதித்து உத்தரவு

Author: Babu Lakshmanan
5 August 2022, 7:00 pm

கோவை : தென்மேற்கு பருவ மழையினால் குனியமுத்தூர் சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி வருகிறது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை நகர் பகுதிகளில் மிதமான மலையும் மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் நொய்யல் ஆற்று பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோவை பாலக்காடு சாலை குனியமுத்தூர் பகுதியில் உள்ள சுண்ணாம்பு காளவாய் தடுப்பணையில் மழை நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

நீரின் ஓட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • Mookuthi Amman 2 latest shooting update அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!