இன்ஸ்டாவால் தொடரும் இம்சை… இளம்பெண் கோவை தமன்னாவுக்கு நிபந்தனை ஜாமீன்…!!

Author: Babu Lakshmanan
5 April 2023, 2:30 pm

கோவை: ஆயுதங்களுடன் இன்ஸ்ட்டாகிராமில் வீடியோ வெளியிட்ட தமன்னா என்கிற இளம்பெண்ணுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

கோவையில் தமன்னா என்ற இளம்பெண் ஆயுதங்களுடன் வீடியோ எடுத்து இன்ஸ்ட்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை பிடிக்க கோவை இன்றியமையா பண்டங்கள் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி வரை அவரை பீளமேடு காவல்துறையினர் இன்ஸ்ட்டாகிராம் விவகாரத்தில் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து கஞ்சா வழக்கில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், அவருக்கு நீதிமன்ற காவல் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தமன்னா(எ) வினோதினி தரப்பில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இதனை விசாரித்த நீதிபதி நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மறு உத்தரவு வரும்வரை தினமும் பீளமேடு காவல் நிலையத்தில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டுமென ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 415

    0

    0