ஓம் நமச்சிவாயா… ஓம் நமச்சிவாயா… கோவில் சுற்றுச்சுவரை இடித்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!!

Author: Babu Lakshmanan
4 August 2022, 3:46 pm

கோவை : கோல்டுவின்ஸ் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட சுயம்பு தம்புரான் கோவில் சுற்று சுவரை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் மூலம் அகற்றியதற்கு, பா.ஜ.க, இந்து முன்னணி அமைப்பினர் ஓம் நமச்சிவாயா என பாடல் பாடி எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோவை கோல்டுவின்ஸ் திருமுருகன் நகரில் சுயம்பு தம்புரான் கோவில் அமைந்துள்து. இந்த கோவிலை சுற்றி மாநகராட்சி இடத்தினை ஆக்கிரமித்து சுற்றுசுவர் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் மாநாகராட்சிக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து, இன்று காலை பொக்லைன் இயந்திரங்களுடன் வந்த மாநாகராட்சி அதிகாரிகள் சுற்றுசுவரை அகற்ற முயன்றனர். அப்போது, அங்கு திரண்ட பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அவர்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு சுற்றுசுவரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது, அங்கு திரண்டு இருந்த பெண்கள் ஓம் நமச்சிவாயா என பாடல் பாடி கோவில் சுவரை இடிக்க கண்ணீர் மல்க எதிர்ப்பை தெரிவித்தனர். பா.ஜ.க., இந்து முன்னணி அமைப்பினரின் போராட்டம் காரணமாக ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!