கோவை மதுரை வீரன் கோவிலில் தங்கக்காசுகள் திருட்டு.. 3 பேரை கைது செய்தது போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
25 March 2022, 9:14 am

கோவை உக்கடம் பகுதியில் மதுரை வீரன் கோவிலில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை உக்கடத்தில் உள்ள மதுரை வீரன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்க காசுகள் மற்றும் சுவாமியின் வீரவாள் ஆகியவை திருட்டு போனது.இதுகுறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் கோவிலில் திருடியதாக நவீன், விக்கி என்கிற விக்ரமார்த்தாண்டன் மற்றும் குட்டி பிரகாஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கடைகளில் வயர்களையும் திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து உக்கடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!